கார் ஹேக்கர்கள் – அதிர்ச்சி ரிபோர்ட்

கம்ப்யூட்டரை போல கார்களை ஹேக் செய்ய முடியம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வினை நிகழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு மென்பொருள் வல்லுநர்கள் இதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஜீப் செரோக்கீ எஸ்யுவி

வெட்ரன் சைபர் மென்பொருள் வல்லுநர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே சோதனைக்கு எடுத்துக்கொண்ட ஜீப் செரோக்கீ எஸ்யுவி இணைய தொடர்புடைய காரை முழுதாக முடக்கி உள்ளனர்.

இதற்க்காக ஒதுக்கப்பட்ட சோதனை இடத்திலிருந்து 15 கிமீ சுற்றுளவுக்குள் இருந்து இந்த காரின் மென்பொருளினை தங்கள் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வந்து காரின் வேகம் ஸ்டீயரிங் மற்றும் பிரேக் என முக்கிய அம்சங்களை அவர்களின் கையில் கொண்டு வந்து காரை தடுமாற செய்துள்ளனர்.

ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் உள்ள கார்களின் மென்பொருள் முக பலவீனமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதனால் இந்த கார்களை முடக்குவது எளிதாம். இவ்வாறு முடக்கும் வாய்ப்புகள் உள்ள கார்களின் எண்ணிக்கை 4.70 லட்சம் ஆகும்.

ads

இதனால் ஃபியட் குழுமம் உடனடியாக இந்த சாஃபட்வேருக்கு பாதுகாப்பு மேம்பாடுகளை செய்துள்ளது. மேலும் இந்த சாஃப்ட்வேரை மேம்படுத்தி வருகின்றது.

எதிர்காலத்தில் வரவிருக்கும் தானியங்கி கார்களுக்கு ஹேக்கர்களால் மிக பெரும் ஆபத்து உள்ளது.

வீடியோ இணைப்பு

Comments