கியா மோட்டார்ஸ் ஆலை சென்னை அருகே வருகை ?

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் கியா தொழிற்சாலை சென்னை ஹூண்டாய் ஆலைக்கு அருகாமையிலே அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Kia-Picanto

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் முறைப்படி இந்திய சந்தையில் தன்னுடைய சேவையை தொடங்க திட்டமிட்டு வருகின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டாலும் கியா பல பிரத்யேக மாடல்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.

Ads

சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையின் அருகே அமைக்க வாய்ப்புள்ளதால் சென்னை சுற்றுவட்டார பகுதி அல்லது ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. ஹூண்டாய் ஐ10 காரினை அடிப்படையாக கொண்ட கியா பைகேன்டூ ஹேட்ச்பேக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களாக கியா இந்தியா வருகின்றது என்ற செய்தி வெளியாகி வந்தாலும் சில கியா மாடல்களை இந்திய சாலைகளில் ஹூண்டாய் சோதனை ஓட்டத்தை நடத்தியும் உள்ள நிலையில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுவதற்க்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. தொடக்கநிலை மற்றும் காம்பேக்ட் ரக மாடல்களுக்கு சவாலாக கியா விளங்கும்.

Comments