கேடிஎம் டியூக் 790 பைக் சோதனை ஓட்டம்

கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 790 அல்லது டியூக் 800 பைக் தற்பொழுது தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ளது. இரட்டை சிலண்டர் கொண்ட 800சிசி என்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும்.

loading...
KTM-Duke-800-Rendering

சவாலான விலையில் மிகவும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக இந்த கேடிஎம் டியூக் 790 பைக் விளங்கும். கேடிஎம் டியூக் 690 பைக்கில் உள்ள பெரும்பாலான பாகங்களை டியூக் 790 பைக்கிலும் இடம்பெற்றிருக்கும்.

டியூக் 690 மற்றும் பான்கர்ஸ் 1290 சூப்பர் டியூக் ஆர் என இரண்டு பைக்கும் மத்தியில் புதிய டியூக் 790 பைக் நிலைநிறுத்தப்பட உள்ளது. இரட்டை சிலிண்டர் கொண்ட 800 சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் ஆற்றல் 100பிஎச்பி க்கு மேலாக இருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.

முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ சாக் அப்சார்பரை பெற்றிருக்கும். முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் பெற்றிருக்கும்.  டிஜிட்டல் கிளஸ்ட்டர் , டெயில் எல்இடி விளக்கு மற்றும் 5 ஸ்போக் ஆலாய் வீல்களை பெற்றுள்ளது.

   KTM-Duke-800-Spy-Shot

இந்த டியூக் 790  பைக்கின் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுதவதனால் இதன் விலை ரூ.5.50 முதல் 7.50 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள இஐசிஎம்ஏ  ( EICMA -Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori ) கண்காட்சியில் கேடிஎம் டியூக் 800 பார்வைக்கு வரவுள்ளது.

KTM Duke 800 or 790 Spotted Testing
imagesource

loading...