மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் – ஒப்பீடு

எஸ்யூவி ஸ்டைலில் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக வந்துள்ள மஹிந்திரா கேயூவி1OO காரின் போட்டியாளர்களான  ஒரு கிரான்ட் i10 மற்றும் ஸ்விஃப்ட்  கார் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

kuv100-suv மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

மஹிந்திராவின் அதிரடி முயற்சியாக விற்பனைக்கு வந்துள்ள கேயூவி100 தொடக்கநிலை காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது. மிக சிறந்த எண்ணிக்கையை பதிவு செய்துவரும் கிராண்ட் ஐ10 , ஸ்விஃப்ட் வேகன்ஆர் , ஃபிகோ போன்ற கார்களுக்கு சவாலாக வந்துள்ளது.

தோற்றம்

கேயூவி1OO கார் எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்ற அமைப்பில் ஹேட்ச்பேக் கார்களில் வித்தியாசமான மிகவும் ஸ்டைலான காரை விரும்புபவர்களுக்கான மிக சரியான சாய்ஸாக அமைந்துள்ளது.

கிராண்ட் ஐ10 இளம் தலைமுறை வாடுக்கையாளர்கள் கவரும் வகையில் சிறப்பான தோற்ற பொலிவுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் ஃபுளூடியக் தாத்பரியத்தில் நேர்த்தியாக உள்ளது.

hyundai-grand-i10 மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

விற்பனையில் முன்னனி வகிக்கும் மாருதி ஸ்விஃப்ட் சிறப்பான தோற்ற பொலிவில் இருந்தாலும் சில ஆண்டுகள் கடந்து விட்டதால் புதிய டிசைனுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தோற்றத்தில் போட்டியாளர்களை விட சிறப்பான கவர்ச்சி மற்றும் தனித்துவமான ஈர்ப்பினை பெற்று மஹிந்திரா KUV1OO மற்றவற்றை முந்துகின்றது. 

உட்புறம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறப்பான ஃபிட் மற்றும் ஃபினிஷ்ங் செய்யப்பட்டு  நேர்த்தியான அழகுடன் சிறந்து விளங்குகின்றது. 5 இருக்கைகளுடன் சிறப்பான இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரும் சிறந்த இன்டிரியர் தரத்துன் 5 இருக்கைகள் ஆப்ஷனில் நேர்த்தியான ஃபினிஷ் செய்யப்பட்டு நல்ல பூட் ஸ்பேசினை பெற்றுள்ளது.

mahindra-kuv100-dashboard மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

மற்ற இரண்டை விட கேயூவி100 மஹிந்திராவின் இன்டிரியர் தரம் மெருகேறியுள்ளது என்பதற்கு அடையாளமாக 6 இருக்கை மற்றும் 5 இருக்கை ஆப்ஷன் டேஸ்போர்டில் கியர் லிவர் , கூடுதல் ஸ்டோரேஜ் வசதி இருக்கையின் அடியில் உள்ளவை போன்ற அம்சங்கள் கவர்கின்றன.

கேயூவி100 5 மற்றும் 6 இருக்கை ஆப்ஷன் இடவசதி , பூட் ஸ்பேஸ் போன்றவை கவர்கின்றன. 

என்ஜின்

1.2 லிட்டர் சீரிஸ் எம் ஃபால்கன் என்ஜினை பெற்றுள்ள கேயூவி100 எஸ்யூவி காரில் 82Ps ஆற்றல் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 84Ps ஆற்றல் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும். கிராண்ட் ஐ10 காரில் 1.2லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் 82Ps ஆற்றல் மற்றும் 114Nm டார்க் வெளிப்படுத்தும்.

mFALCON-engine மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

டீசல் கேயூவி100 காரில் 77Ps ஆற்றல் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் 70Ps ஆற்றல் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும். கிராண்ட் ஐ10 காரில் 1.2லிட்டர் டீசல் என்ஜின் 74Ps ஆற்றல் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும்.

அனைத்திலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கிராண்ட் ஐ10 4 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

டீசல் மாடல்கள்

கேயூவி100 டீசல்காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.32கிமீ ஆகும்.

ஸ்விஃப்ட் டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.2கிமீ ஆகும்.

கிராண்ட் ஐ10 டீசல்  காரின் மைலேஜ் லிட்டருக்கு 24கிமீ ஆகும்.

maruti-swift மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

பெட்ரோல் மாடல்கள்

கேயூவி100 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.15கிமீ ஆகும்.

ஸ்விஃப்ட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17.37கிமீ ஆகும்.

கிராண்ட் ஐ10 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.5கிமீ மற்றும் 15.31கிமீ (ஆட்டோ) ஆகும்.

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வேரியண்டிலும் கேயூவி100 பெற்றுள்ளது. மேலும் ஆப்ஷனலாக முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் உள்ளன. போட்டியாளர்களில் டாப்என்ட் மற்றும் மிட் வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

 

Maruti-Swift-Mahindra-KUV100-Hyundai-Grand-i10-Petrol-Spec-Comparison மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

கேயூவி100 பெட்ரோல் ஒப்பீடு

 

Maruti-Swift-Mahindra-KUV100-Hyundai-Grand-i10-Diesel-Spec-Comparison மஹிந்திரா கேயூவி1OO vs கிரான்ட் I10 Vs ஸ்விஃப்ட் - ஒப்பீடு

கேயூவி100 டீசல் ஒப்பீடு

விலை

மிக சரியாக போட்டியாளர்களை விட மிக சராசரியாக 30,000 வரை குறைவான தொடக்க விலையில் வந்துள்ள கேயூவி100 மிக சிறப்பான சாய்ஸாக விளங்குகின்றது.

[envira-gallery id=”5460″]

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin