சாம்சங் பாதுகாப்பு டிரக்

சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு டிரக் முந்தும்பொழுது பாதுகாப்பாக முந்தும் வகையில் டிரக்கின் பின்புறம் வெப்கேம் மூலம் இயங்கும் பெரிய எல்சிடி திரையை பொருத்தியுள்ளனர்.

சாம்சங் பாதுகாப்பு டிரக்

சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு டிரக்குகள் (Samsung Safety Truck)என்ற பெயரில் இந்த டிரக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிரக்கில் முன்புறத்தில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காடசிகளை நேரடியாக டிரக்கின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 4 ஸ்கிரின் பெரிய எல்சிடி திரையை பொருத்தியுள்ளனர்.

இந்த திரையில் முன்புறம் உள்ள டிராஃபிக் , முன்புறம் வரும் வாகனங்களை தெளிவாக இந்த நிரையில் பார்க்க இயலும். மேலும் மோசமான வானிலை , வெளிச்சம் இல்லாத நேரங்களிலும் தெளிவாக காண இயலும்.

அர்ஜென்டினா நாட்டில் இந்த நுட்பத்தினை சாம்சங் சோதனை செய்து வருகின்றது. அர்ஜென்டினாவில் பெரும்பாலான சாலைகள் இருவழிச் சாலையாக உள்ளதால் அதிக விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த முறையை சோதனை செய்து வருகின்றது.

Samsung develops Safety trucks to improve road safety

சாம்சங் பாதுகாப்பு டிரக் வீடியோ

  

Comments

loading...