சிட்டி சிவிடி கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா

ஹோண்டா சிட்டி சிவிடி கியர்பாக்ஸ் கார்களை மென்பொருள் மேம்பாட்டிற்க்காக ஹோண்டா நிறுவனம் 3879 சிட்டி சிவிடி கார்களை திரும்ப அழைத்துள்ளது.

Honda_City
ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று சிறந்த விளங்கும் செடான் கார்களில் முதன்மையானதாகும். கடந்த பிப்ரவரி 2014ம் ஆண்டு முதல் நவம்பர் 2014 வரை தயாரிக்கப்பட்ட 3879 கார்கள் மட்டுமே திரும்ப அழைக்கின்றது.

loading...

சிவிடி கியர்பாக்சினை செயல்படுத்தும் மென்பொருளை மேம்படுத்தவதற்க்கு எவ்விதமான கட்டணமும் இல்லை.  இதன்மூலம், சிட்டி செடான் காரின் சிவிடி கியர்பாக்சின் ஹைட்ராலிக் சிஸ்டத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

 உங்கள் அருகாமையில் உள்ள சேவை மையத்தினை இன்றே அனுகவும். மேலும் உங்கள் சிட்டி கார் இந்த பட்டியலில் உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள உங்கள் வாகனத்தின் 17 இலக்க வின் (MAKGM66**********) நம்பரை கொண்டு  தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பினை பயன்படுத்திக்கொள்ளும். Honda city cvt recall

Honda to recall City CVT

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin