சுசூகி இக்னிஸ் காரில் ஏஎம்டி – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ

மாருதி சுசூகி இக்னிஸ் காரில் ஏஎம்டி பொருத்தப்பட்ட மாடல் 2016 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ  (GIIAS 2016) அரங்கில் காட்சிக்கு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் மாருதி இக்னிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

maruti-suzuki-ignis-concept சுசூகி இக்னிஸ் காரில் ஏஎம்டி - 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ

இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட உள்ள மாருதி இக்னிஸ் விலை ரூ. 4 லட்சம் முதல் 6 லட்சத்தில் அமையலாம். 2016 இந்தேனேசியா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாருதி இக்னிஸ் காரில் 84 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm ஆகும்.இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இக்னிஸ் கார் விற்பனைக்கு வரும்பொழுது 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனுடன் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கும்.  பண்டிகை காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

maruti-suzuki-ignis-concept-side சுசூகி இக்னிஸ் காரில் ஏஎம்டி - 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ

இக்னிஸ் கார் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 3700மிமீ , அகலம் 1660மிமீ மற்றும் உயரம் 1595மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2438மிமீ ஆகும். இந்தியாவில் கேயூவி100 மாடலுக்கு சவாலான மாடலாக விளங்கும்.

மேலும் வருகின்ற அக்டோபர் மாத்ததில் தொடங்க உள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் ஐரோப்பியா சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin