சுசூகி விட்டாரா எஸ்யூவி காரின் ஸ்பை படங்கள் வெளியானது

புதிய சுசூகி விட்டாரா எஸ்யூவி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய சுசூகி விட்டாரா கார் இந்திய சந்தைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

Suzuki-Vitara-Spied

வெளியாகியுள்ள படங்களில் சுசூகி விட்டாரா இடதுபக்க டிரைவிங் மாடலாகும். இந்தியாவில் சோதனை செய்வதற்க்காக மாருதி சுசூகி இறக்குமதி செய்திருக்கலாம். கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்த விட்டாரா 2013ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுசூகி ஐவி-4 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.

loading...

வெளிநாடுகளில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்ன்களில் விற்பனை செய்யப்படும் விட்டாரா காரில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்றவை பெட்ரோல் மாடல்களிலும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் டீசல் மாடலிலும் உள்ளது.

5 இருக்கைகளை கொண்ட காம்பேக்ட்ரக எஸ்யூவி மாடலான விட்டாரா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக இந்தியாவில் வரும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki-Vitara-India

Suzuki-Vitara-India-Spy-Shot

இந்தியாவுக்கு சுசூகி விட்டாரா விற்பனைக்கு வந்தால் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படும். மேலும் சுசூகி விட்டாரா விலை ரூ. 14 லட்சத்தில் தொடங்கலாம். இந்தியா வருகை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் உறுதிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

Suzuki-Vitara-India-Spied

Suzuki-Vitara-India-Rear
New Suzuki Vitara SUV spotted in India
image source: team fiat moto club facebook
loading...