சுஸூகி ஹயபுசா பைக்கின் வரையறுக்கப்பட்ட பதிப்பு

சுஸூகி இந்தியா ஹயபுசா பைக்கில் ஹயபுசா இசட் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை ரூ.16.20 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சுஸூகி ஹயபுசா பைக்

ஹயபுசா இசட் பைக்கில் யோசிமுர்ரா R-77J கார்பன் என்ட் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இரட்டை வண்ண கலவைகளில் கிடைக்கும். அவை நீளம் சிலவர் கலந்த வண்ணம் மற்றும் வெள்ளை, சில்வர் கலந்த வண்ணத்திலும் கிடைக்கும்.

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. 1340சிசி 4 சிலிண்டர்களை கொண்ட  திரவம் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 197 பிஎச்பி மற்றும் முறுக்கு விசை 155என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ads

சுஸூகி ஹயபுசா பைக் விலை ரூ. 16.20 லட்சம் ஆகும். (ex-showroom mumbai)

Comments