சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக் ரூ.13.57 லட்சம்

இந்தியாவிலே ஒருங்கினைக்கப்படும் முதல் சூப்பர் பைக் என்ற பெருமையுடன் சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக் விலை ரூ.13.57 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய விலை ரூ.15.95 லட்சம் ஆகும்.

2016-Suzuki-Hayabusa-Daring-Red

பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்படுவதனால் (சிகேடி) ஹயபுசா பைக்கின் விலை ரூ. 2.38 லட்சம் வரை குறைந்துள்ளது.  195 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 155என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர். 0 முதல் 100கிமீ வேகத்தினை  வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

Ads

இதன் போட்டியாளரான கவாஸாகி ZX-14R பைக்கின் விலை ரூ.17.90 லட்சம் ஆகும். எனவே போட்டியாளருடன் ஈடுகொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை இந்திய சுஸூகி மோட்டார்சைக்கிள் எடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் புதிய வண்ணங்களை பெற்ற மாடல்களாக சுசூகி ஹையபுஸா மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.  தற்பொழுது ஹயபுஸா சூப்பர் பைக்கில்  சிவப்பு கலந்த சில்வர் , கிரே கலந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த சில்வர் என மொத்தம் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. சிறப்பான செயல்திறன் , ஹேன்டிலிங் , நிலைப்பு தன்மை போன்றவற்றை பெற்றுள்ள மிக சிறந்த பைக்காக சுசூகி ஹயபுசா விளங்குகின்றது.

டுகாட்டி டியாவேல் , டுகாட்டி 1299 பனிகேல் , கவாஸாகி நின்ஜா ZX-14R  , டுகாட்டி மான்ஸ்டர் 1200 மற்றும் பெனெல்லி TNT 1190 போன்ற பைக்குகளுக்கு   சுஸூகி ஹயபுசா போட்டியாக விளங்குகின்றது.

2016 சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக் ; ரூ.13.57 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

 

Comments