செவர்லெ கேப்டிவா எஸ்யூவி 2013

செவர்லே கேப்டிவா கிராஸ்ஒவர் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜெனிவா ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட மேம்படுத்திய கேப்டிவா புதிய என்ஜினுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

எவ்விதமான விளம்பரமும் விழாவும் இல்லாமல் தன்னுடைய இணையத்தில் முழுவிபரங்கள் மற்றும் விலையை வெளியிட்டு விற்பனைக்கு வந்துள்ளதை செவர்லே இந்தியா உறுதிசெய்துள்ளது.

செவர்லெ கேப்டிவா

2013 கேப்டிவா தோற்றத்திலும் என்ஜினிலும் புதிய மாற்றங்களை கண்டுள்ளது. முகப்பில் கிரில்,  விளக்குகள், எல்இடி பனி விளக்குகள்  போன்றவற்றில் மாற்றங்கள் பெற்றுள்ளன. மேலும் பின்புறத்தில் உள்ள விளக்குகள் மற்றும் பின்புற பம்பரில் எல்இடி விளக்குகள் உள்ளன. குரோம் பூச்சு கொண்ட இரட்டை எஸ்கேஸ்ட் பைப்புகள் கொண்டுள்ளது.

மிகவும் கவர்ச்சியான முகப்பு விளக்குகள், மிக நேர்த்தியாக மேருகேற்றப்பட்ட உட்ப்புற கட்டமைப்பு புதிய டேஸ்போர்டு மற்றும் இன்ஸ்டுருமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின்புற இருக்கைகளையும் கவரும் வகையில் ஏசி வென்ட்கள், 2 டின் ஆடியோ அமைப்பு, பூளூடூத் மூலம் பாடல்களை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது.

Ads

பாதுகாப்பு வசதிகள்

6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் , இபிடி, டிசிஎஸ், ரியர் பார்க்கிங் உதவி, மழை வருவதனை உணர்ந்து இயங்கும் வைப்பர் , மலை ஏறுவதற்க்கான அமைப்பு, போன்றவை உள்ளன.

செவர்லெ கேப்டிவா

புதிய என்ஜின்

புதிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 186.5 பிஎஸ் மற்றும் டார்க் 424என்எம் ஆகும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

செவரோலெட் கேப்டிவா மைலேஜ்

கேப்டிவா மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட எல்டி மாடல் லிட்டருக்கு 14.6கிமீ ஆகும். ஆட்டோ கியர் பாக்ஸ்  பொருத்தப்பட்ட எல்இசட் மாடல் லிட்டருக்கு 12.12கிமீ ஆகும்.

கேப்டிவா விலை விபரம்

கேப்டிவா விலை ரூ.2349802 ஆகும்.

Comments