ஜாகுவார் சிஎக்ஸ்-17 எஸ்யூவி

  ஜாகுவார் சிஎக்ஸ்-17 கிராஸ்ஓவர் எஸ்யூவி ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காராக வலம் வரவுள்ள  சிஎக்ஸ்-17 வெகுவாக கவர்ந்துள்ளது.

  அலுமினியம் பாடியால் உருவாக்கப்பட உள்ள கிராஸ்ஓவர் எஸ்யூவி மிக சிறப்பான தோற்றம் மற்றும் உட்ப்புற கட்டமைப்பினை கொண்டிருக்கும். மேலும் தற்பொழுது விற்பனையில் உள்ள ஃஎப் டைப் மற்றும் எக்ஸ்ஃஎப் போன்ற மாடல்களின் சிறப்பு அம்சங்களையும் சிஎக்ஸ்-17யில் சேர்க்கப்பட்டுள்ளன.
  Jaguar C-X17 crossover
   சிஎக்ஸ்-17 எஸ்யூவி காரின் நீளம் 4718மிமீ மற்றும் 1649மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் 23 இன்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த வாகனத்திற்க்கான என்ஜின் மிக குறைவான கார்பனை வெளியிடக்கூடிய வகையில் தயாரிக்க உள்ளனர்.
  சிஎக்ஸ்-17 எஸ்யூவியாக இருந்தாலும் மிகவும் சொகுசு தன்மையாக இருக்கும். 2015 ஆம் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரலாம்.
  Jaguar C-X17 crossover

  Comments