ஜாகுவார் முதல் எஸ்யூவி கார்

ஜாகுவார் நிறுவனம் முதல் எஸ்யூவி காரினை களமிறக்க உள்ளது வாகனவியல் துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது. வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் தன்னுடைய முதல் எஸ்யூவி காரை பார்வைக்கு வைக்க உள்ளது.

ஜாகுவார் கார்

ஜாகுவார் எஸ்யூவி காரின் பெயர் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் க்யூ டைப் அல்லது எஸ்க்யூ டைப் என்ற பெயரில் இருக்கலாம். ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 வீல் டிரைவ் கொண்டிருக்கும். இதன் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 2.0 லிட்டர் ட்ர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் லேண்ட் ரோவர் எவோக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

Comments