ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

ஜீப் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்களை தயாரிப்பதில் உலக அளவில் பிரசத்தி பெற்ற நிறுவனமாகும். ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் குழுமத்தின் கீழ் ஜீப் பிராண்டு செயல்படுகின்றது.

jeep-teaser ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜீப் நிறுவனம் கடந்த ஆண்டில் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொருளாதார சூழல் காரணமாக வரும் 2016யில் இந்திய சந்தையில் நுழைவதனை உறுதி செய்துள்ளது. மேலும் இந்திய பிரிவு ஜீப் இணையம் , பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை திறந்துள்ளது.

ஜீப் வரலாறு

வில்லியஸ் என்பவரால் 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜீப் நிறுவனத்தின் வில்லியஸ் ஜீப்களை நம்முடைய இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் உரிமம் பெற்று விற்பனை செய்தது. அதன் காரணமாகத்தான் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய பாரம்பரிய கிரிலாக ஜீப் நிறுவன கிரிலை அடிப்படையாக  முகப்பில் வைத்து அனைத்தும் மாடல்களிலும் தொடர்கின்றது. இது மட்டுமல்லாமல் மஹிந்திரா தன்னுடைய அனைத்து கார்களையும் எஸ்யூவி கார்களாக தயாரிக்கின்றது.

jeep-willys ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

ஜீப் வில்லியஸ்

ஜீப் என்பது தனிப்பட்ட பிராண்ட் பெயராக தொடங்கப்பட்டாலும் நாளைடைவில் அது ஆட்டோமொபைல் உடற்கூறு அடிப்படையாக கொள்ளப்பட்டது. ராணுவ தேவைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஜீப் வாகனங்கள் (GP – for Government Purposes or General Purpose ) இந்த பெயரே மருவி ஜீப் பிராண்டு என ஆனதாக கூறப்படுகின்றது.

ஜீப் கிராண்ட் செரோகி , ஜீப் கிராண்ட் செரோகி SRT மற்றும் ரேங்கலர் என மூன்று பிரபலமான ஜீப் எஸ்யூவி கார் மாடல்களை வரும் ஜனவரி மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

2016-jeep-grand-cherokee-1024x696 ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

ஜீப் கிராண்ட் செரோகி

jeep-grand-cherokke-srt ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

ஜீப் கிராண்ட் செரோகி SRT

jeep-Wrangler-suv ஜீப் எஸ்யூவி இந்தியா இணையம் அறிமுகம்

ஜீப் ரேங்கலர் எஸ்யூவி

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin