ஜீப் எஸ்யுவி இந்தியாவில் உற்பத்தி

ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் ஜீப் எஸ்யுவி கார்களை இந்தியாவிலே உற்பத்தி செய்வதற்க்காக ரூ.1782 கோடி முதலீட்டை ஃபியட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜீப் செரோக்கீ
ஜீப் செரோக்கீ எஸ்யுவி

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபியட் நிறுவனங்கள் இணைந்து இந்த முதலீட்டை இராஞ்சாகாவுன் பகுதியில் இந்த தொழிற்சாலையை அமைக்க உள்ளனர்.

இந்த ஆண்டு விற்பனைக்கு வரவிருந்த ஜீப் ரேங்கலர் , ஜீப் செரோக்கீ மாடல்கள் அடுத்த வருடத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து ஜீப் எஸ்யுவி மாடல்கள் 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளனர்.

ஜீப் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருனமாகும். ஃபியட் கிறைஸ்லர் மற்றும் டாடா கூட்டணியில் ஜீப் எஸ்யூவி விற்பனை புதிய பாதையை அமைக்கும் என ஃபியட் கிறைஸ்லர் தலைவர் செர்ஜியோ மார்ச்சியோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தொடர்ந்து ஜீப் பிராண்டின் 4வது தொழிற்சாலையாக இது விளங்கும். இதற்க்கு முன்பு இத்தாலி , பிரேசில் மற்றும் சீனாவில் இன்னும் சில மாதங்களில் ஜீப் உற்பத்தி தொடங்க உள்ளது.

Fiat Chrysler jeep model to be produced in India 2017