டட்சன் கோ NXT லிமிடேட் எடிசன்

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் புதிய கோ  NXT லிமிடேட் எடிசன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புதிய டட்சன் கோ NXT பதிப்பில் சில சிறப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ

பாதுகாப்பு குறைவான கார் என்பதால் பரவலாக புறக்கணிக்கப்பட்ட டட்சன் கோ பெரிதாக வரவேற்பினை பெறவில்லை. புதிய என்எக்ஸ்டி வேரியண்டில் பார்க்கிங் சென்சார் , பார்சல் டிரே போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய டட்சன் கோ NXT வேரியண்டில் பக்கவாட்டில் மோல்டிங் , புகைப்போக்கியில் குரோம் பூச்சூ மற்றும் உட்புறத்தில் கருப்பு நிற இன்டிரியரை பெற்றுள்ளது.

என்எக்ஸ்டி வேரியண்டில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள் ரீமோட் லாக்கிங் , ரியர் பார்க்கிங் சென்சார் , பார்சல் டிரே போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் 3 கலன் கொண்ட பெட்ரோல் விசைப்பொறி பொருத்தியுள்ளனர். இதன் குதிரைதிறன் ஆற்றல் 67பிஎச்பி மற்றும் டார்க் 104 என்எம் ஆகும். 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த பதிப்பில் மொத்தம் 1000 கார்கள் மட்டுமே வரும் டிசம்பர் இறுதிவரை விற்பனை செய்யப்பட உள்ளது.

டட்சன் கோ NXT கார் விலை ரூ.4.09 லட்சம் ஆகும் (ex-showroom Delhi)

Datsun GO NXT limted edition Launched

Comments

loading...