டாக்சி சந்தையில் ஹூண்டாய் ஐ10

  ஹூண்டாய் ஐ10 காரினை டாக்சி சந்தையில் களமிறக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரின் உற்பத்தியை நிறுத்த உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  கிராண்ட் ஐ10 காரின் வரவிற்க்கு பின்னர் ஐ10 காரின் விற்பனை சற்று பின்தங்கியுள்ளது. மேலும் சான்ட்ரோ டாக்சி சந்தையில் பெற்ற மதிப்பினை ஐ10 காரை கொண்டு ஈடுகட்ட உள்ளனர்.

  ஹூண்டாய் ஐ10

  ஐ10 பேஸ் மாடல் டாக்சி மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இந்த மாடலானது பவர் ஸ்டீரியங், ஏசி போன்ற வசதிகள் இருக்காது. சிஎன்ஜி கிட் ஆப்ஷனலாக பொருத்தி தரப்படும்.

  மும்பை, டெல்லி, கோல்கத்தா மற்றும் பெங்களூரூ போன்ற நகரங்களில் முதல்கட்டமாக விற்பனைக்கு வரவுள்ளது.

  Comments