டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி கார் வாங்கலாமா ?

உலகின் விலை குறைவான டாடா நானோ ஜென்எக்ஸ் காரில் ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) காரை வாங்கலாமா என இந்த பகிர்வில் பார்க்கலாம்.

டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

விலை குறைவான கார் என்றாலும் இந்திய சந்தையில் முந்தைய நானோ எடுபடவில்லை. ஆனால் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள நானோ ஜென்எக்ஸ் கூடுதலான சில அம்சங்களை கொண்டுள்ளது.

தோற்றம் மற்றும் உட்புறம்

புதிய நானோ முந்தைய மாடலைவிட சற்று தோற்றத்தில் முகப்பில் உள்ள மாற்றங்கள் சிறப்பாக உள்ளது. முன்புற பம்பரில் உள்ள கிரில் வடிவம் மற்றும் வட்ட வடிவ பனி விளக்குகளை கொண்டுள்ளது. டாடா இலச்சினை கருப்பு பட்டைகளுக்கு மத்தியில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பு விளக்குகளை சுற்றி கருப்பு நிறத்தை இணைத்துள்ளது.
பின்புற பம்பரும் முன்பக்கத்தில் உள்ள கிரில் போலவே பின்பகுதியிலும் கொண்டுள்ளது.

நானோ ஜென்எக்ஸ் 3099மிமீ நீளமும் , 1495மிமீ அகலமும் மற்றும் 1652மிஈ உயரத்தினை கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2230மிமீ மற்றுஃ கிரவுண்ட் கிளியரன்ஸ் 180மிமீ ஆகும்.

டாடா நானோ ஜென்எக்ஸ் இன்டிரியர்

உட்புறத்தில் டேஸ்போர்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. ஆனால் ஸ்டீயரிங் வீல் மூன்று ஸ்போக்களுடன் ஸெஸ்ட் மற்றும் போல்ட் காரில் உள்ளதை இணைத்துள்ளனர். அப்ல்சரி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பூட் வசதி 94 லிட்டர் ஏஎம்டி மாடலில் உள்ளது. மெனுவல் மாடலில் 110 லிட்டர் கொண்டுள்ளது. பின்புற இருக்கையை மடக்கினால் 500லிட்டர் வரை கிடைக்கும்.

என்ஜின்

முந்தைய 624சிசி பெட்ரோல் என்ஜினில் மாற்றங்கள் இல்லை. 38பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் முறுக்குவிசை 51என்எம் ஆகும். 5 வேக ஏஎம்டி மற்றும் 4 வேக மெனுவல் கியர்பாக்சில் கிடைக்கின்றது.

நானோ ஜென்எக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 21.9கிமீ ஏஎம்டி மாடலுக்கு , மெனுவல் மாடலுக்கு 23.6 கிமீ ஆகும்

நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி 

டாடாவால் ஈசி ஸிஃப்ட் என அழைக்கப்படும் 5 வேக ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) பொருத்தப்பட்டுள்ளது. மிக சிறிய காரில் சிறப்பான விலையில் அமைந்திருப்பது மிக பெரிய பலமாகும். நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் மிக இலகுவாக கிள்ட்ச் உதவியில்லாமால் கியர்களை மாற்றிக்க கொள்ள உதவும்.

டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

நானோ ஜென்எக்ஸ் போட்டியாளர்கள்

நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி போட்டியாளராக கருதப்படும் மாருதி ஆல்டோ K10 நானோ காரை விட விலையில் 1 லட்சம் வரை கூடுதலாகும். மாருதி ஆல்டோ மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும். பூட் வசதி 177லிட்டர் ஆகும்.

நானோ பற்றி முழுவிபரம் அறிய டாடா நானோ ஜென்எக்ஸ்

நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி விலை விபரம் 

நானோ GenX XMA — ரூ.2.81 லட்சம் (ஏஎம்டி)

நானோ GenX XTA — ரூ.2.99 லட்சம்(ஏஎம்டி)

 (all prices ex-showroom Chennai)

ஆட்டோமொபைல் தமிழன் பார்வை

மிகவும் விலை குறைவான மற்றும் நெரிசல் மிகுந்த நகரங்களில் சிறிய நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி காரை  இயல்பாக இயக்குவதற்க்கு முடியும் .  குறைவான விலையில் ஆட்டோ மெனுவல் கியர்பாகசினை கொண்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு அம்சங்களில் சற்று குறைவான மதிப்பினை பெறுகின்றது.

டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

World lowest Price car Tata Nano GenX gets AMT gearbox.

Comments

loading...