டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி விற்பனைக்கு வந்தது

டாடா நானோ காரின் ஜென்எக்ஸ் நானோ கார் ஏஎம்டி மாடலுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.14 லட்சத்தில் தொடங்கி 2.99 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tata%2BNano%2Bgenx%2B%2Bnew

உலகின் விலை குறைவான கார் என்ற பெருமைக்குரிய நானோ காரின் ஜென்X நானோ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட சில வசதிகளை கூடுதலான இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எனப்படும் ஆட்டோமெனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைத்து தரத்திலும் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளனர்.

தோற்றம்

மிக சிறிய நானோ கார் தோற்ற அமைப்பில் முகப்பில் ஸ்மோக்டு முகப்பு விளக்குகள் , கருப்பு நிற பட்டையுடன் கூடிய குரோம் பூச்சு , பனி விளக்குகள் , புதிய முன் மற்றும் பின் பம்பர்களை கொண்டுள்ளது.

loading...
Tata%2BNano%2Bgenx%2B

உட்புறம்

முந்தைய டேஸ்போர்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. ஆனால் புதிய 3 ஸ்போக்களை கொண்ட ஸ்டீயரிங் வில் , பவர் ஸ்டீயரிங் , முன்பக்க ஜன்னல் கண்ணாடிகளுக்கு பவர் வின்டோஸ் , ஆம்பிஸ்டிரீம் ஆடியோ அமைப்பு , பூளூடூத் , சிடி , ரேடியோ , ஆக்ஸ்-இன் இணைப்பு போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

Tata%2BNano%2Bgenx%2B%2Bamt
Tata Nano GenX EasyShift AMT

Tata%2BNano%2Bgenx%2B%2Binterior

எரிபொருள் குறைவினை காட்டும் இன்டிக்கேட்டர் , இருக்கு எரிபொருள் அளவை கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என காட்டும் கருவி , கியர் சிஃப்ட் இன்டிகேட்டர் ஏஎம்டி மாடல்களுக்கு மட்டும்.

பூட் வசதி ஏஎம்டி கார்களுக்கு 94லிட்டர் மற்றும் மெனுவல் கார்களுக்கு 110லிட்டர் ஆகும்.

என்ஜின்

நானோ ஜென்எக்ஸ் மாடலில் முந்தைய 38பிஎஸ் ஆற்றலை வெளிப்படுதக்கூடிய 624சிசி பெட்ரோல் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது.  4வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ‘ஈசி சிஃப்ட்’ என டாடாவால் அழைக்கப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Tata%2BNano%2Bgenx%2B%2Brear

நானோ ஜென்எக்ஸ் மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும். அவை  சிகப்பு , பெர்சியன் ரோஸ் , வெள்ளை , கோல்டு ,சில்வர் , நீலம் மற்றும் பர்ப்பிள் ஆகும்.

நானோ மெனுவல் வேரியண்ட் XE, XM மற்றும் XT ஏஎம்டி வேரியண்ட் XMA மற்றும் XTA ஆகும்.

நானோ ஜென்எக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 21.9கிமீ ஏஎம்டி மாடலுக்கு , மெனுவல் மாடலுக்கு 23.6 கிமீ ஆகும்

டாடா நானோ ஜென்எக்ஸ் விலை 

நானோ GenX XE — ரூ.2.14 லட்சம்

நானோ GenX XM — ரூ.2.43 லட்சம்

நானோ GenX XT — ரூ.2.62 லட்சம்

நானோ GenX XMA — ரூ.2.81 லட்சம் (ஏஎம்டி)

நானோ GenX XTA — ரூ.2.99 லட்சம்(ஏஎம்டி)

(all prices ex-showroom Chennai)

Tata Nano GenX launched starting price at Rs.2.14 lakhs. Nano genx gets Easy shift AMT and Manual gearbox.

loading...