டாடா நானோ ஜென்எக்ஸ் வேரியண்ட் முழுவிபரம்

டாடா நானோ ஜென்எக்ஸ் என்ற பெயரில் மீண்டும் நானோ காரை மேம்படுத்தி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Tata%2BNano%2Bgenx டாடா நானோ ஜென்எக்ஸ் வேரியண்ட் முழுவிபரம்

2009ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ 6 ஆண்டுகளை கடந்த பின்னர் மேம்படுத்தப்பட்டு ஆட்டோமெட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா நானோ ஜென்எக்ஸ் மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அவற்றில் இரண்டு வேரியண்ட்கள் ஏஎம்டி பொருத்தப்பபட்டதாகும்.

டாடா நானோ ஜென்எக்ஸ் XE

பேஸ் மாடலான ஜென்எக்ஸ் XE வேரியண்டில் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் குறைவினை காட்டும் இன்டிக்கேட்டர் , இருக்கு எரிபொருள் அளவை கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என காட்டும் கருவி , சன் வைசர் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பூஸ்டெட் பிரேக் , இருக்கை பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா நானோ ஜென்எக்ஸ் XM

நானோ ஜென்எக்ஸ் XM வேரியண்டில் XE வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏசி வசதி உள்ளது.

டாடா நானோ ஜென்எக்ஸ் XT

நானோ ஜென்எக்ஸ் XT வேரியண்டில் XM வேரியண்ட் வசதிகளுடன் ஆம்பிஸ்டிரீம் ஆடியோ அமைப்பு , 4 ஸ்பிக்கர்கள் ,பூளூடூத் , சிடி , ரேடியோ , ஆக்ஸ்-இன் இணைப்பு  ரிமோட் என்ட்ரி , சென்ட்ரல் லாக்கிங் , முன்பக்கம் மட்டும் பவர் வின்டோ போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

Tata%2BNano%2Bgenx%2B%2Binterior டாடா நானோ ஜென்எக்ஸ் வேரியண்ட் முழுவிபரம்

டாடா நானோ ஜென்எக்ஸ் XMA

நானோ ஜென்எக்ஸ் XM வேரியண்டில் உள்ள வசதிகளுடன் மெனுவல் கியர்பாக்சுக்கு பதிலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் , இரட்டை டிரிப் மீட்டர் மேலும் கியர் ஸிஃப்ட் இன்டிக்கேட்டர் கொண்டுள்ளது.

டாடா நானோ ஜென்எக்ஸ் XTA

நானோ ஜென்எக்ஸ் XT வேரியண்டில் உள்ள வசதிகளுடன் மெனுவல் கியர்பாக்சுக்கு பதிலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் , இரட்டை டிரிப் மீட்டர் மேலும் கியர் ஸிஃப்ட் இன்டிக்கேட்டர் கொண்டுள்ளது.

மேலும் அறிய டாடா நானோ ஜென்எக்ஸ்

டாடா நானோ ஜென்எக்ஸ் கார் விலை விபரம்

நானோ GenX XE — ரூ.2.14 லட்சம்

நானோ GenX XM — ரூ.2.43 லட்சம்

நானோ GenX XT — ரூ.2.62 லட்சம்

நானோ GenX XMA — ரூ.2.81 லட்சம் (ஏஎம்டி)

நானோ GenX XTA — ரூ.2.99 லட்சம்(ஏஎம்டி)

(all prices ex-showroom Chennai)

Tata Nano GenX gets automated Manual transmission and also 4 speed Manual transmission . Nano Genx variants and Details 
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin