டாடா நானோ ட்விஸ்ட் காரின் XE வேரியண்ட் அறிமுகம்

டாடா நானோ காரில் புதிய பேஸ் வேரியண்டை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நானோ ட்விஸ்ட் XE வேரியண்ட் விலை ரூ. 2.06 லட்சம் ஆகும்.

டாடா நானோ ட்விஸ்ட்

ட்விஸ்ட் XT  டாப் வேரியண்டில் உள்ள சில வசதிகள் நீக்கப்பட்டு XE வேரியண்ட் பேஸ் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. எக்ஸ்டி மாடலில் உள்ள ஹீட்டருடன் கூடிய ஏசி , பின்புற பார்சல் டிரே, ஆடியோ அமைப்பு, முன்புற கதவுகளுக்கான பவர் வின்டோ, சென்டரல் லாக்கிங் போன்றவை எக்ஸ்இ மாடலில் இருக்காது.

எக்ஸ்இ வேரியண்டில் பவர் ஸ்டீயரிங், ஏசி , பிளாக் டேஸ்போர்டு மற்றும் ஹைட் ரெஸ்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

டாடா நானோ ட்விஸ்ட் எக்ஸ்இ விலை ரூ.2.06 லட்சம் (ex-showroom delhi)

Comments