டாடா போல்ட் காரின் ஸ்போர்டிவ் பெர்ஃபார்மென்ஸ் மாடல்

  டாடா போல்ட் காரில் ஸ்போர்டிவ் பெர்ஃபார்மென்ஸ் மாடலை வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  போல்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜினை 120எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ட்யூனிங் செய்து சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காராக விற்பனைக்கு கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளதாம்.

  டாடா போல்ட்

  தற்பொழுது ரெவோட்ரான் என்ஜின் 89எச்பி ஆற்றலை மட்டுமே வழங்கி வருகின்றது.  ஆற்றலை 120எச்பி ஆக உயர்த்தி ஃபியட் சி501 கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிகின்றது.

  ஜெனிவா மோட்டார் ஷோவில் போல்ட் காரில் ஸ்போர்ட்டிவ் தோற்றம் தரக்கூடிய வகையில் சில மாறுதல்களை செய்து 17 இஞ்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டு கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ் தரும் வகையில் காட்சிக்கு வைக்க உள்ளனராம்.

  ads

  டாடா கார் பிராண்டு மதிப்பினை உலகயளவில் உயர்த்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த பெர்ஃபார்மென்ஸ் மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  படிக்க டாடா போல்ட் கார் முழுவிபரம்

  ஆதாரம்; autocarindia

  Tata Bolt 1.2-litre Revotron petrol engine power 120hp

  Comments