டாடா மோட்டார்சின் குவாட்ரிசைக்கிள் திட்டம்

டாடா மோட்டார்ஸ் குவாட்ரிசைக்கிள் வாகனத்தினை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிராவோ என்ற பெயரில் குவாட்ரிசைக்கிளை 2018 யில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் குவாட்ரிசைக்கிளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த டாடா நிறுவனம் தற்பொழுது குவாட்ரிசைக்கிள் உருவாக்கி வருகின்றது. அந்த புராஜெக்ட் பெயர் தான் பிராவோ ஆகும்.

டாடா ஐரீஸ் இலகுரக வாகன தயாரிப்பு கூட்டணியில் உருவாகி வரும் பிராவோ குவாட்ரிசைக்கிள் பெட்ரோல் என்ஜினில் 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

 பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள்

பஜாஜ் நிறுவனம் குவாட்ரிசைக்கிள் தயாரிப்பு நிலையில் முன்னிலையில் உள்ளது. பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.

ads

மஹிந்திரா, டிவிஎஸ் மற்றும் பியாஜியோ போன்ற நிறுவனங்களும் குவாட்ரிசைக்கிள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தடை பெறப்பட்டுள்ளதால் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் ஆர்இ60 விற்பனைக்கு இன்னும் வரவில்லை.

ஆதாரம்; business-standard

Comments