டாடா ஸெஸ்ட் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்தது

டாடா ஸெஸ்ட் காரின் ஒரு வருட கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது. டாடா ஸெஸ்ட் செடான் காரின் XMS வேரியண்டில் மட்டும் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா ஸெஸ்ட்
டாடா ஸெஸ்ட் 

ஸெஸ்ட் காரின் சிறப்பு ஆனிவர்சரி பதிப்பில் வெள்ளை நிற வண்ணத்தில் பாடி ஸ்டிக்கரிங் , புதிய வீல் கவர் , கருப்பு நிற ஓஆர்விஎம், சிறப்பு பதிப்பு பேட்ஜ் போன்றவற்றை பெற்றுள்ளது.

வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு பதிப்பில் பாடி ஸ்டிக்கரிங் , முன்பக்க பம்பர் அடியில் பாடி கலர் , கருப்பு நிற வண்ணத்தில் ஓஆர்விஎம் , புதிய வீல் கவர் , சிறப்பு பேட்ஜ் முத்திரை சி பில்லரில் சேர்க்கப்பட்டுள்ளது.

ads

உட்புறத்தில் ஓளிரும் ஸ்கஃப் பிளேட், முன்புற இருக்கை கவரில் சிறப்பு பேட்ஜ் முத்திரை மற்றும் ரிமோட் மூலம் இயங்கவல்ல பின்புற விண்ட் ஷீல்டுக்கான திரை சீலை போன்றவற்றை பெற்றுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. குறிப்பிட்ட சில டீலர்களிடம் மட்டுமே வரும் அக்டோபர் வரை மட்டுமே கிடைக்கும்.

டாடா ஸெஸ்ட் விலை விபரம்

ஸெஸ்ட் XMS பெட்ரோல் – ரூ. 5.89 லட்சம்
ஸெஸ்ட் XMS டீசல் – ரூ. 6.94 லட்சம்

Tata Zest Anniversary Special Edition Launched

Comments