டாடா ஸெஸ்ட் புதிய வேரியண்ட் விபரம்

டாடா ஸெஸ்ட் காரில் புதிய டீசல் ஏஎம்டி வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்டிஏ வேரியண்ட் விபரங்களை கானலாம்.

டாடா ஸெஸ்ட்

மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வரும் ஸெஸ்ட் காரில் புதிய தானியங்கி மெனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கூடுதல் வசதிகள் கொண்ட டாப் வேரியண்டாக வந்துள்ளது.

எக்ஸ்டி வேரியண்டில் பல கூடுதல் வசதிகளை புகுத்தி ஏம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு எக்ஸ்டிஏ என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள வகையில் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக் , இபிடி , பார்க்கிங் சென்சார், வாய்ஸ் கமென்ட்ஸ், பகல் நேர விளக்குகள், ஓட்டுநர் இருக்கையை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி, தானியங்கி கிளைமெட் கன்ட்ரோல்,பின்புற கண்ணாடிக்கு டிஃபோகர் , மற்றும் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

89எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக தானியங்கி ஆளியக்க பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.

ads

டாடா ஸெஸ்ட் எக்ஸ்டிஏ வேரியண்ட் விலை ரூ.8.14 லட்சம் (ex-showroom Chennai)

Comments