டிவிஎஸ் அகுலா 310 பைக் வருகை விபரம்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் அகுலா 310 ஃபேரிங் பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வருகின்ற பிப்பரவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துக்கு இடையில் விற்பனைக்கு வரவுள்ளது.

TVS-Akula-310-concept

 

அப்பாச்சி 300

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட இந்த மாடல் அப்பாச்சி 300 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது அல்லது மாற்றாக புதிய பிராண்டிலோ வரவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

loading...

முழுதும் கார்பன் ஃபைபர் பாடியால் வடிவமைக்கப்பட அகுலா 310 மாடலில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 34 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 28Nm ஆகும்.

TVS-Akula-310-concept-front-view

முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. கேடிஎம் ஆர்சி390 , யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

130 கிலோ எடை கொண்ட மாடலாக விளங்க போகும் டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

TVS-Akula-310-bike

கேடிஎம் RC390 , யமஹா R3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் நேரடியான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 300 4V விளங்கும். வருகின்ற 2017 ஆம் ஆண்டின் மாரச் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள  அகுலா 310 விலை ரூ. 1.80 லட்சத்தில் அமையலாம்.

என்ன ஸ்கூட்டர் வாங்கலாம் மோட்டார் டாக்கீஸ் கேள்வி பதில் – www.automobiletamilan.com/motor-talkies/

TVS-Akula-310-concept-exhaust

TVS-Akula-310

 

TVS-Akula-310-concept-rear-seat

loading...