டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

அப்பாச்சி சீரிஸ் பைக்கில் புதிதாக இணைந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி 200 4V பைக் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தரவல்ல அப்பாச்சி 200 பைக்காக விளங்குகின்றது.

tvs-apache-rtr-200 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

அப்பாச்சி 160 , அப்பாச்சி 180 பைக்குகளின் மூலம் பெற்ற வெற்றியை தொடரும் வகையில் சிறப்பான முறையில் நவீன அம்சங்களை புகுத்தி பலவிதமான வேரியண்ட் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் தந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

 • கார்புரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன்
 • ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லா மாடல் ஆப்ஷன்
 •  டிவிஎஸ் டயர் மற்றும் பிரேலி டயர் ஆப்ஷன்
 • டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல்
 • ஆயில் – ரேம் ஏர் அசிஸ்ட் என்ஜின்
 • முதன்முறையாக 4 வால்வு மற்றும் மோனோஷாக் அப்சார்பர்
 • 0 முதல் 60 கிமீ வேகத்தினை 3.9 விநாடிகளில் எட்டும்
 • உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ
 • மொத்தம் 8 விதமான வேரியண்ட்
 • எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் சிறப்பான தோற்றத்தினை பெற்றிருக்கின்றது.

tvs-apache-200-split-seats டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

தோற்றம்

ஸ்டீரிட் ஃபைட்டர் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலில் ட்ராகன் கான்செப்ட் அம்சங்களை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள அப்பாச்சி RTR 200 4V வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் சிறப்பான மிரட்டல் தரும் பொலிவினை கொண்டுள்ள முகப்பு விளக்கில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் சிறப்பாக உள்ளது.

டபுள் கார்டள் ஸ்பிளிட் சட்டத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அப்பாச்சி 200 பைக்கின் பெட்ரோல் டேங்க் கவுல் சிறப்பாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் இருக்கைகள் மேலும் ஆர்டிஆர் 200 4வி பைக்கிற்கு மேலும் தோற்ற பொலிவினை கூட்டுகின்றது.

tvs-apache-rtr200-bike-photo-1 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

மிரட்டலான ஸ்டீரிட் ஃபைட்டராக போட்டியாளர்களை விட சிறப்பான ஸ்டைலிங் அம்சங்கள் கவர்ந்திழுக்கும் கருப்பு , கிரே , மஞ்சள்  , மேட் கருப்பு , மேட் வெள்ளை ,  வெள்ளை மற்றும் சிவப்பு என 7 வண்ணங்களில் கிடைக்கின்றது.

என்ஜின்

அப்பாச்சி 180 பைக்கில் உள்ள என்ஜினை ரீபோர் செய்து அதன் போர் அளவினை அதிகரித்து 200சிசி என்ஜினாக மாற்றியுள்ளது. மேலும் ஆயில் கூல் ரேம் ஏர் அசிஸ்ட் என்ஜினை பெற்றுள்ள அப்பாச்சே 200 பைக்கில் கார்புரேட்டர் மற்றும் FI ஆப்ஷன் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப தேர்வாக அமையும்.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

tvs-apache-rtr-200-fi-engine டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய FI என்ஜின் ஆப்ஷன் பெர்ஃபாமென்ஸ் ரக பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக வேகமாக 0 முதல் 60 கிமீ வேகத்தினை 3.9 விநாடிகளிலும் , 0 முதல் 100 கிமீ வேகத்தினை 12 விநாடிகளிலும் எட்டிவிடும்.

பிரேக் மற்றும் சஸ்பென்ஷன்

இருசக்கர வாகனங்களில் முதன்முறையாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக்கில் ஆப்ஷனலாக அறிமுகம் செய்த டிவிஎஸ் மோட்டார்ஸ் அதே பானியை அப்பாச்சே 200 பைக்கிலும் தொடர்கின்றது. முன்பக்கத்தில் டியூவல் சேனல் ஏபிஎஸ் வழங்கியுள்ளது.

முன்பக்கம் : 270மிமீ டிஸ்க் பிரேக்

பின்பக்கம் : 240 மிமீ டிஸ்க் பிரேக்

முதற்முறையாக டிவிஎஸ் நிறுவனம் மோனோஷாக் அப்சார்பரை பயன்படுத்தியுள்ளது. இதில் KYB மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளது.

tvs-apache-rtr-200-fr-wheel டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

17 இஞ்ச் வேவி அலாய் வீல்யினை பெற்றுள்ள பைக்கில் புதிய டிவிஎஸ் ரிமோரா டயர் மற்றும் பிரேலி டயர்கள் ஆப்ஷனலாக உள்ளது.

முன்பக்க டயர் ; 90/90 x 17

பின்பக்க டயர் ; 130/70 x 17

சிறப்பம்ங்கள்

ஏபிஎஸ் , பிரேலி டயர் , டிஜிட்டர் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் , டிரீப் மீட்டர் , ஓடோமீட்டர் , கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் , கியர் பொசிஷன் இன்டிகேட்டர் , சரவீஸ் ரிமைன்டர் , எல்இடி ரன்னிங் விளக்கு , பின்புற ஸ்பிளிட் இருக்கை அடியில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறிப்பிடதக்க அம்சமாகும்.

tvs-apache-200-1 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா

வேரியண்ட்

 • Apache RTR 200 4V Carb + TVS tyres
 • Apache RTR 200 4V Carb + Pirelli tyres
 • Apache RTR 200 4V Carb + TVS tyres + ABS
 • Apache RTR 200 4V Carb + Pirelli tyres + ABS
 • Apache RTR 200 4V FI + TVS Tyres
 • Apache RTR 200 4V FI+ Pirelli tyres
 • Apache RTR 200 4V FI + TVS Tyres+ ABS
 • Apache RTR 200 4V FI+ Pirelli tyres + ABS

Carburettor – carb , FI – Fuel Injection , RTR -Racing Throttle Response , ABS – Anti-locking Brake System

விலை

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விலை ரூ.88,990 தொடக்க விலை முதல் ரூ.1,15,000 லட்சம் வரையிலான விலையில் வந்துள்ளது.

முதல்தர நகரங்களில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் அப்பாச்சி200 பைக்க நாடு முழுதும் ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்கும். ஏபிஎஸ் மாடலும் சற்று தாமதமாக கிடைக்கும்.

போட்டியாளர்கள்

பஜாஜ் பல்சர் 200ஏஎஸ் , கேடிஎம் டியூக் 200 , கர்ஷிமா ZMR போன்ற பைக்குகளுக்காக போட்டியாக அமைந்துள்ளது.

  அப்பாச்சி 200 வாங்கலாமா

இளைஞர்களை கவர்ந்திழுக்கும் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக பைக்காக விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆர்டிஆர்  பைக் வாங்குவதற்க்கு ஏற்ற மிக சிறப்பான மாடலாகும்.

[envira-gallery id=”5537″]

loading...
469 Shares
Share469
Tweet
+1
Pin