டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விரைவில்

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வரும் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் அப்பாச்சி 200சிசி பைக் டார்க்ன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி
டிவிஎஸ் அப்பாச்சி

ஆட்டோ எக்ஸ்போ 2014ம் ஆண்டில் பார்வைக்கு வந்த டார்க்ன் கான்செப்ட் அடிப்படையில் உருவாகி வரும்  அப்பாச்சி 200 பைக்கில் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்றிருக்கும்.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் 20பிஎச்பிக்கு மேல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 200சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் மோனோ சாக் அப்சர்பர் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இருக்கும்.

ads

அப்பாச்சி 200 பைக்கில் பகல் நேர எல்இடி விளக்குகள் , ஸ்பிளிட் இருக்கைகள் , மொபைல் சார்ஜிங் போர்ட் , எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை பெற்றிருக்கும்.

1 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் டிவிஎஸ் அப்பாச்சி 200 வரும் நவம்பர் மாதம் சந்தைக்கு வரலாம்.

TVS Apache RTR 200 coming soon

Comments