டிவிஎஸ் ஜூபிட்ர் ஸ்கூட்டர் அறிமுகம்

  டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 110சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஜூபிடர் ஸ்கூட்டர் குறிப்பாக ரே, ஏக்டிவா போன்ற மாடல்களுக்கு கடும் சவாலை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  டிவிஎஸ் நிறுவனத்தின் வீகோ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜினே ஜுபிடர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8 என்எம் ஆகும்.

  டிவிஎஸ் ஜூபிட்ர் ஸ்கூட்டர்

  5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜர் மற்றும் 17லிட்டர் அளவுக்கு இடவசதியினை கொண்டுள்ளது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  4 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் கிரே ஆகும்.  முதற்கட்டமாக வடமாநிலங்களில் விற்பனைக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தென் மாநிலங்களில் விற்பனைக்கு வரும்.

  Ads

  1 லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

  டிவிஎஸ் ஜூபிட்ர் ஸ்கூட்டர் விலை ரூ.44200(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

  Comments