டிவிஎஸ் XL சூப்பர் 1 கோடி விற்பனையை கடந்தது

1980 தொடங்கி இன்று வரை டிவிஎஸ் XL இந்திய சந்தையில் நிரந்தர அம்சமாக விளங்கி வருகின்றது. டிவிஎஸ் 50 XL ஊரக சந்தை தொடங்கி நடுத்தர மக்களின் உற்ற நண்பனாக விளங்குகின்றது.

tvs%2Bxl%2Bsuper%2B1 டிவிஎஸ் XL சூப்பர் 1 கோடி விற்பனையை கடந்தது

இது வரை டிவிஎஸ் எக்ஸ்எல் சுமார் 1 கோடி மொபட்களை விற்பனையை கடந்துள்ளது. 1 கோடி கடந்த வாகனங்களில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டும் இணைந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் புதிய டிவிஎஸ் XL  சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் சில்வர் கிரே மற்றும் டைட்டானியம் கிரே என இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளனர். சிறப்பு கிராஃபிக்ஸ் ஸ்டீக்கர் , குரோம் பிளேட் கிராப் ரெயில் , சைலன்சர் பாதுகாப்பு கவரில் 1 கோடி என முத்திரையுடன் இந்த சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான சுமை தாங்கும் திறன் , நல்ல மைலேஜ் , சவாலான விலை ஊரக மற்றும் சிறு குறு தொழில் முதாலாளிகளின் பல தேவைகளுக்கு பெரும் உதவியாக டிவிஎஸ் 50 XL சூப்பர் விளங்குகின்றது.

TVS%2BXL%2BSuper டிவிஎஸ் XL சூப்பர் 1 கோடி விற்பனையை கடந்தது
டிவிஎஸ் XL சூப்பர்

டிவிஎஸ் XL சூப்பர் சிறப்பு பதிப்பு தமிழ்நாடு , ஆந்திர பிரேதசம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மட்டும் கிடைக்கும்.

TVS XL Super crosses 1 crore moped milestone

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin