டீசல் கார்களுக்கு தடை விதிக்க முடிவு

டீசல் கார்களின் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. சுமார் 80 % டீசல் கார்களை இந்நாடு கொண்டுள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டு முதல் டீசல் காரின் பயன்பாட்டினை வெகுவாக குறைக்க முடிவு செய்துள்ளது.

கார்

சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த முடிவினை பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் டீசல் கார் பயன்பாட்டின் மூலம் அதிகப்படியான கார்பன் புகை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மானுவல் வால்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தவும், எலக்ட்ரிக் கார்களுக்கு மிக அதிகப்படியான சலுகையை வழங்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

Comments