டெல்லியில் தொடரும் டீசல் கார் தடை – 2000சிசி

தலைநகர் டெல்லி மற்றும் தலைநகர பகுதிகளில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் கார்களுக்கான தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. டாக்ஸி கார்களை சிஎன்ஜி மாடலாக மாற்ற மேலும் ஒருமாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

supreme-court

உலகயளவில் அதிக மாசு உமிழ்வு நிறைந்த நகரங்களில் முதலிடத்தினை பிடித்த டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபட்டினை கட்டுப்படுத்த டெல்லி அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஒற்றை  இரட்டை வாகன இயக்கம் , 2000சிசி – க்கு கூடுதலான என்ஜின் கொண்ட கார்களுக்கு தடை , டாக்சிகளை சிஎன்ஜி-க்கு மாற்றுவது போன்றவையாகும்.

ஜனவரி முதல் மார்ச் 31 வரை வழங்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து நீதிபதி தாகூர் தலைமையிலான 3 நபர் சிறப்பு அமர்வு கடந்த 31ந் தேதி உத்திரவிட்டது. கடந்த 3 மாதங்களாக முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான மஹிந்திரா , டொயோட்டா , மெர்சிடிஸ் பென்ஸ் ,  ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் தங்களின் கூடுதல் சிசி கொண்ட என்ஜின்களை விற்பனை செய்ய இயலாமல் போயிற்று.

அதிரடியாக மஹிந்திரா நிறுவனம் 1.99 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்ப்பியோ மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும் டாடா நிறுவனமும் குறைந்த சிசி என்ஜினை உருவாக்கி வருகின்றது.

தினமும் 1300 முதல் 1500 பயணிகள் வரை டெல்லியில் பதிவு செய்யப்படுகின்றது. இவற்றில் 50 சதவீத டீசல் வாகனங்களாகும்.

 

Comments

loading...