டொயோட்டா இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியது

இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகச்சிறப்பான வளர்ச்சியை எட்டிவருகின்ற நிலையில் மே 2016 மாத விற்பனையின் முடிவில் டாடா மோட்டார்சினை பின்னுக்கு தள்ளி டொயோட்டா இந்தியா 4வது இடத்தினை கைப்பற்றியுள்ளது.

toyota-innova-crysta-mpv டொயோட்டா இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியது

டொயோட்டா நிறுவனத்தின் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரின் அபரிதமான விற்பனை எட்டியுள்ள நிலையில் டொயோட்டா நான்காவது இடத்தினை பெற்றுள்ளது.

கடந்த மே 2015 ஆம் ஆண்டுடன் மே 2016 வருடத்தினை ஒப்பீட்டால் டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனம் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மே 2016யில் மொத்தம் 12,614 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் இன்னோவா எம்பிவி காரின் விற்பனை எண்ணிக்கை 7259 கார்களாகும்.

டாடா மோட்டார்ஸ் மே 2015 உடன் ஒப்பீடுகையில் 26.7 சதவீத சரிவினை சந்தித்து 9456 கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்சின் ஹிட் கொடுத்த மாடலாக வலம் வரும் புதிய டியாகோ கார் கடந்த மாதத்தில் 3287 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 20,000க்குமேற்பட்ட முன்பதிவினை பெற்று 10,000 டியாகோ கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை சமீபத்தில் கடந்துள்ளது.

tata-tiago டொயோட்டா இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியது

டாடாவின் அடுத்தடுத்த மாடல்களான கைட் 5 செடான் , ஹெக்ஸா எம்பிவி மற்றும் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி போன்றவை நல்ல வரவேற்பினை பெற்றால் டாடா மீண்டும் 4வது இடத்தினை கைப்பற்ற வாய்ப்புள்ளது.  இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடியான சவாலான மாடலாக ஹெக்ஸா எம்பிவி விளங்கும்.

Toyota takes 4th largest passenger vehicle maker in Indian Auto Industry

loading...
34 Shares
Share34
Tweet
+1
Pin