டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் லிவா காரின் கிராஸ்ஒவர் மாடலாக எட்டியோஸ் கிராஸ் என்ற பெயரில் லிவா காரினை மெருகேற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

8 விதமான வண்ணங்களில் அசத்தப்போகும் எட்டியோஸ் கிராஸ் காரில் பல சிறப்பு அம்சங்களை புகுத்தியுள்ளது. முகப்பு கிரில் சிறப்பான தோற்றத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் சைட் கிளாடிங், ரூஃபில் ரெயில்கள், பின்புற ஸ்பாய்லர்கள், டைமன்ட் ஃபினிஷிங் கொண்ட 15 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

பனி விளக்குகள், ரியர் டிஃபோக்கர் போன்ற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.  ஸ்டீயரியங்கில் ஆடியோ கண்ட்ரோல் அமைப்பினை பெற்றுள்ளது. பியோனோ கருப்பு வண்ணத்தில் இண்டிரியர் பெற்றுள்ளது.

எட்டியோஸ் லிவா காரில் பொருத்தப்பட்டிருந்தே அதே என்ஜினே கிராஸ் காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ், டூவல் காற்றுப்பைகள் மற்றும் இபிடி போன்ற வசதிகள் பெற்றுள்ளன. பெட்ரோல் மாடலில் இரண்டு விதமான என்ஜினை கொண்டுள்ளது. மேலும் டீசல் மாடலும் கிடைக்கும்.

 80 பிஎஸ் சக்தி வாயந்த  1.2 லிட்டர் என்ஜின் மற்றும்  90 பிஎஸ் சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 68 பிஎஸ்  சக்தி வாய்ந்த 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தற்பொழுதுள்ள லிவா காரை விட 120மிமீ நீளமாகவும், 40மிமீ அகலமாகவும் மற்றும் 45மிமீ உயரத்தினை கொண்டிருக்கும்.

லிவா காரை விட கிராஸ் கார் ரூ.60000 வரை கூடுதலாக இருக்கலாம். முன்பதிவு நடந்து வருகின்றது. வரும் மே இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

Comments

loading...