டொயோட்டா கேம்ரி கார் ரூ.2.30 லட்சம் விலை சரிவு

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காரின் விலை ரூ.2.30 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கேம்ரி காரின் விலை அதிரடியாக குறைய காரணம் மத்திய அரசின்  கலால் வரி குறைப்பே ஆகும்.

Toyota-Camry-Hybrid-1024x633 டொயோட்டா கேம்ரி கார் ரூ.2.30 லட்சம் விலை சரிவு

மத்திய அரசு ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை 24 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் காரணமாகவே கேம்ரி ஹைபிரிட் கார் ரூ.2.30 லட்சம் வரை விலை சரிவினை சந்தித்துள்ளது.

கேம்ரி ஹைபிரிட் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 160 PS மற்றும் இழுவைதிறன் 213 Nm ஆகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார் என இரண்டும் சேர்த்து ஒட்டுமொத்த ஆற்றல் 205PS ஆகும். இதில் 6 வேக சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மைலேஜ் லிட்டருக்கு 19.16 கிமீ ஆகும்.

சாதரன வேரியண்டில் 181 PS ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 233 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி மைலேஜ் லிட்டருக்கு 12.98 கிமீ ஆகும்.

சாதரன வேரியண்டில் எவ்விதமான விலை மாற்றங்களும் இல்லை .  கேம்ரி ஹைபிரிட் வேரியண்ட் விலை ரூ.30.98 லட்சம் ஆகும். ( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

 

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin