டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் அறிமுகம்

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் இந்தியாவில் ரூ.29.75 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு விதமான ஆற்றலை கொண்டு செயல்படும் ஹைபிரிட் நுட்பத்தில் டொயோட்டாவின் கை உலகயளவில் ஓங்கிநிற்கின்றது.

பெங்களூரில் உள்ள ஆலையில் இதற்க்கான தனி பிரிவில் ஹைபிரிட் கேம்ரி உற்பத்தி செய்யப்படுகின்றது. 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்த்து வெளிப்படுத்தும் ஆற்றல் 205பிஎஸ் ஆகும். எலக்ட்ரானிக் சிவிடி கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
டொயோட்டா கேம்ரி
ஹைபிரிட் கேம்ரி லிட்டருக்கு 19.16கிமீ மைலேஜ் தரும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. 1 கிலோமீட்டருக்கு 122.8 கிராம் கார்பன் வெளிப்படுத்தும். 4 விதமான வண்ணங்களில் கிரே மெட்டாலிக், வெள்ளை பியரல் கிரஸ்டல் சைன், சில்வர் மெட்டாலிக் மற்றும் ஆட்டியூட் பிளாக்.
17 இன்ச்ஆலாய் வீல் , 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் கொண்ட ஏசி, டிராக்ஸன் கன்ட்ரோல், 4 காற்றுப்பைகள் என பல வசதிகளை கேம்ரி கொண்டுள்ளது.
டொயோட்டா ஹைபிரிட் கேம்ரி விலை ரூ29.75 லட்சம் ஆகும்

Comments