தெருவிளக்குகள் மூலம் இயங்கும் பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தெருவிளக்குகள் மூலம் சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. லைட் அன்ட் சார்ஜ் (Light and Charge) என்ற பெயரில் செயல்படுத்த உள்ளது.

BMW%2BLight%2Band%2BCharge தெருவிளக்குகள் மூலம் இயங்கும் பிஎம்டபிள்யூ கார்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் இடத்தில் சார்ஜ் செய்யும் நோக்கில் தெருவிளக்குகள் உள்ள இடங்களில் சார்ஜ் பாயிண்ட்ரை பொருத்தி அதன் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும்படி செய்வதற்க்கு உண்டான வழிமுறைகளை பிஎம்டபிள்யூ ஆய்வு செய்து வருகின்றது.

தனியான சார்ஜிங் நிலையங்கள் நிறுவுவதை காட்டிலும் குறைவான செலவு பிடிக்கும் மேலும் நகரங்களில் அதிகமான தெருவிளக்குகள் இருக்கும் என்பதனால் எளிதாக சார்ஜ் செய்ய இயலும்.

லைட் அன்ட் சார்ஜ் கான்செப்ட்டினை பிஎம்டபிள்யூ சோதனை செய்து வருகின்றது. சார்ஜ் செய்தமைக்கான கட்டணத்தினை ஸ்வீப் கார்டு அல்லது மொபைல் ஆப் வழியாக செலுத்தும் வழிமுறையை இணைக்கும்.

BMW Light and Charge system

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin