நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி அறிமுகம்

  நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி காரை ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.  முந்தைய தலைமுறை காரை விட எக்ஸ்ட்ரெயில் பல வசதிகளை பெற்றுள்ளது.

  நிசான் எக்ஸ்ட்ரெயில்

  4 வீல் டிரைவ் நிரந்தர அம்சமாக தேவைப்படும் பொழுது மாற்றிக் கொள்ளலாம். மேலும் தற்பொழுது உள்ள 2.0 லிட்டர் என்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கும். மேலும் புதிய சிவிடி எக்ஸ்ட்ரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

  எல்இடி முகப்பு விளக்குகள், 7 நபர்கள் அமர்ந்து இலகுவாக பயணிக்க முடியும்,  உட்ப்புற கட்டமைப்பு மற்றும் இருக்கைகள் என பலவற்றை முந்தைய மாடலை விட பல மடங்கு உயர்த்தியுள்ளது. நேவிகேஷன் அமைப்பு, ஆடியோ மற்றும் வீடியோ, 19 இன்ச் ஆலாய் வீல் போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.

  முந்தைய மாடலைவிட எரிபொருள் சிக்கனத்திலும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் உலகம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

  நிசான் எக்ஸ்ட்ரெயில்

  Comments