நிசான் கிரிப்ஸ் கிராஸ்ஓவர் கான்செப்ட் அறிமுகம்

நிசான் கிரிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிராஸ்ஓவர் ரக பெர்ஃபாமென்ஸ் கான்செப்ட் மாடல் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. நிசான் கிரிப்ஸ் காம்பேக்ட் ரக கிராஸ்ஓவர் மாடலாக விளங்கும்.

நிசான் கிரிப்ஸ்
நிசான் கிரிப்ஸ்

ஸ்போர்ட்ஸ் காரான நிசான் 240Z மாடலின் உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ள நிசான் கிரிப்ஸ் மிக நேர்த்தியான தோற்றத்தில் இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

ஸ்போர்ட்டிவ் கிராஸ்ஓவர் ரக மாடலாக விளங்கும் கிரிப்ஸ் காரின் நீளம் 4100மிமீ ஆக இருக்கும் என்பதனால் மிக சிறப்பான இடவசதியுடன் கூடிய 4 இருக்கை கொண்ட மாடலாக விளங்கும். இதில் 22 இஞ்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும்.

நிசான் கிரிப்ஸ்

உட்புறத்தில் ரெட்ரோ ஸ்டைல் ஸ்டீயரிங் வீல் மற்றும் கிளாசிக் டேஸ்போர்டினை பெற்றிருக்கும். ஜூக் மாடலின் அடிப்படையில் எல்இடி முகப்பு விளக்குகளை பெற்றிருக்கும்.

கிரிப்ஸ் காரில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தபட்ட ஹைபிரிட் நுட்பத்தில் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

நிசான் கிரிப்ஸ்நிசான் கிரிப்ஸ்நிசான் கிரிப்ஸ்நிசான் கிரிப்ஸ்

 Nissan Gripz Concept revealed at Frankfurt IAA 2015

Comments

loading...