நிசான் பேட்ரோல் எஸ்யூவி இந்தியா வருகை

நிசான் மோட்டார்ஸ் இந்திய நிறுவனம் பேட்ரோல் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிசான் பேட்ரோல் எஸ்யூவி

பேட்ரோல் எஸ்யூவி காரில் 400 குதிரைகளின் ஆற்றலை தரவல்ல சக்திவாய்ந்த 5.6 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 559என்எம் ஆகும்.  மூன்று விதமான கியர்பாகஸ்களை கொண்டுள்ளது.

மிகவும் நேர்த்தியான இன்டிரியர் அமைப்பினை கொண்ட எஸ்யூவி காராக பேட்ரோல் விளங்கும். இன்ஃபினிட்டி க்யூ80 காரின் உட்புறத்தின் பெரும்பகுதி பயன்படுத்தியுள்ளனர்.

நிசான் பேட்ரோல் எஸ்யூவி

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்று மிகவும் பெரிய எஸ்யூவி காரான பேட்ரோல் எஸ்யூவி லேண்ட் க்ரூஸர் காருக்கு நேரடியான போட்டியாக விளங்கும். மேலும் ஆடி க்யூ7 மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்-கிளாஸ் போன்ற கார்களுக்கும் சவாலினை ஏற்படுத்தலாம்.

Ads

முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள நிசான் பேட்ரோல் எஸ்யூவி ரூ.1கோடி விலையில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

நிசான் பேட்ரோல் எஸ்யூவி
நிசான் பேட்ரோல் எஸ்யூவி

Comments