நிஸான் டெரானோ எஸ்யூவி காரின் ஏஎம்டி விபரம் வெளியானது

நிஸான் நிறுவனத்தின் இந்தியா பிரிவின் நிஸான் டெரானோ எஸ்யூவி காரின் உயர்ரக வேரியண்டில் கூடுதலாக ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கான முன்பதிவினை ரூ.25,000 செலுத்தி செய்துகொள்ளலாம். மேலும் டெரானோ ஏஎம்டி காரின் நுட்ப விபரங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Nissan-Terrano-suv-AMT நிஸான் டெரானோ எஸ்யூவி காரின் ஏஎம்டி விபரம் வெளியானது

உயர்ரக XVD பிரிமியம் 110hp 1.5 லிட்டர் 248 Nm டார்க்கினை டீசல் வேரியன்டில் இடம்பெற்றுள்ள 6 வேக ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது. டெரானோ எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 19.61 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லதாகும்.

தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பல கூடுதல் வசதிகளை பெற்றுள்ள காரில் குறிப்பாக ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (Hill Assist Control), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (Electronic Stability Program – ESP ) , ஒட்டுநர் ஆர்ம்ரெஸ்ட் , எலக்ட்ரிக் ஃபோல்டிங் ஓஆர்விஎம் (ORVM-outside rear-view mirrors) உடன் இணைந்த டர்ன் சிக்னல் இன்டிகேட்டர் , ஆன்டி-பின்ஞ் எனப்படும் கைகளை உணர்ந்து செயல்படும் ஓட்டுநர் பக்க கதவு கிளாஸ் போன்றவை ஆகும்.

Nissan-Terrano-AMT நிஸான் டெரானோ எஸ்யூவி காரின் ஏஎம்டி விபரம் வெளியானது

டெரானோ காரின் அசலான டஸ்ட்டரில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஈசி-ஆர் ஏஎம்டி இடம்பெற்றதை தொடர்ந்து டெரானோ காரிலும் ஏஎம்டி வந்துள்ளது. மேலும் கூடுதலாக புதிய வண்ணமாக சேன்ட்ஸ்டோன் பிரவுன் சேர்க்கப்பட்டுள்ளது. அதிகார்வப்பூர்வமான விலை வெளிவராத நிலையில் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 13.75 லட்சம் முதல் ரூ. 13.85 லட்சம் வரையிலான விலைக்குள் எக்ஸ்ஷோரூம் விலை அமையலாம். டெலிவரி அக்டோபர் இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிஸான் டெரானோ போட்டியாளர்கள் டஸ்ட்டர் , பிஆர்-வி , ஹூண்டாய் க்ரீட்டா மற்றும் எஸ்-க்ராஸ் போன்றவை ஆகும்.
Nissan-Terrano-AMT-Dashboard நிஸான் டெரானோ எஸ்யூவி காரின் ஏஎம்டி விபரம் வெளியானது

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin