பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மார்ச் 26 முதல்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் வரும் மார்ச் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்சர் ஆர்எஸ்200 பைக் களமிறங்குகின்றது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 விரைவில்

பல்சர் 200 என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 199.5சிசி ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 24.03பிஎச்பி மற்றும் முறுக்குவிசை 18.6என்எம் ஆகும். ஆனால் என்எஸ் 200 பைக்கினை விட 0.8எச்பி ஆற்றல் மற்றும் 0.3என்எம்  கூடுதலாக இருக்கும்.

இரட்டை புராஜெக்டர் முகப்பு விளக்குகள்,  எல்இடி பகல் நேர விளக்குகள் , பின்புறத்தில் எல்இடி விளக்குகள் மேலும் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

பல்சர் ஆர்எஸ்200
Ads

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் விலை ரூ.1.10 முதல் 1.25 லட்சத்திற்க்குள் இருக்கலாம். 20000 முதல் 30000 பைக்குகள் வரை உற்பத்தி செய்து தயார்நிலையில் உள்ளதால் விற்பனைக்கு பின் உடனடியாக டெலிவரி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா ஆர்15 பைக்கிற்க்கு நேரடியான போட்டியாக புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக்கினை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வருகின்றது.

Comments