பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் விற்பனைக்கு வந்தது

பஜாஜ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்சர் ஆர்எஸ்200 ஸ்போர்டிவ் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல்சர் ஆர்எஸ்200 பைக் மிக சவலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

இரட்டை புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் மிக நேர்த்தியான முகப்பு தோற்றத்தினை பெற்றுள்ளது. முழுதும் அலங்கரிக்கப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 மிக கூர்மையான தோற்ற முகப்பினை கொண்டுள்ளது. பின்புற நிறுத்த விளக்குகளில் எல்இடி விளக்குகளால் மிளர்கின்றது.
அலங்கரிக்கப்பட்ட பக்கவாட்டு பேனல்கள் அசத்தலான வடிவத்தில் கவர்ந்திழுக்கின்றது. மேலும் பகல் நேர எல்இடி விளக்குகள் , கருமை வண்ணத்தில் ஆலாய் வீல் மற்றும் அழகான மீட்டர் கன்சோல் போன்றவை உள்ளது.
முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃபிளை டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள்  சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.
ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனிலும் பல்சர் ஆர்எஸ்200 பைக் கிடைக்கும்.
24.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் டாப்ஸ்பீடு 141கிமீ ஆகும். லிட்டருக்கு 54கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள்  மற்றும் சிவப்பு வண்ணங்களில் மட்டுமே பல்சர் ஆர்எஸ200 பைக் கிடைக்கும்.

பல்சர் ஆர்எஸ் 200 பைக் விலை விபரம் (ex-showroom, Delhi)

Ads

பல்சர் ஆர்எஸ்200 — ரூ. 1.18 லட்சம் (ஏபிஎஸ் இல்லை)

பல்சர் ஆர்எஸ்200 — ரூ.1.30 லட்சம் (ஏபிஎஸ் மாடல்)

Comments