பல்சர் ஆர்எஸ்200 கருப்பு வண்ணம் விலை அதிகரிப்பு

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் ஆர்எஸ்200 கருப்பு கலரில் ரூ.2000 வரை கூடுலான விலையில் வந்துள்ளது.

bajaj-pulsar-rs200-black1
பல்சர் ஆர்எஸ்200 

இளைஞர்களின் மிக விருப்பமான பிராண்டாக உள்ள பல்சர் ஆர்எஸ்200 கருப்பு வண்ணம் மிக நேரத்தியாக உள்ளது. கருப்பு , மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

loading...

ஸ்போர்ட்டிவ் ரக ஆர்எஸ்200 பல்சர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் ஃபுல் ஃபேரிங் ரக பைக்காகும்.  இரட்டை புராஜெக்டர் விளக்குடன் முழுதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான தோற்றத்தில் விளங்குகின்றது.

24.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 18.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும் பநயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடல் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் கருப்பு வண்ணத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

bajaj-pulsar-rs200-black-rear

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் விலை விபரம்

  • பல்சர் ஆர்எஸ்200 – ரூ. 1.24 லட்சம் (கருப்பு)
  • பல்சர் ஆர்எஸ்200 ஏபிஎஸ் – ரூ. 1.36 லட்சம் (கருப்பு)
  • பல்சர் ஆர்எஸ்200 – ரூ. 1.22 லட்சம் (மற்ற வண்ணங்கள்)
  • பல்சர் ஆர்எஸ்200 – ரூ. 1.34 லட்சம் (மற்ற வண்ணங்கள்)

Bajaj Pulsar RS200 Demon Black colour price increased
loading...