பஜாஜ் வழங்கும் பல்சர் மேனிக்ஸ் மற்றும் தி அவென்ஜர் காட்ஸ் – குழுமம் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் RS200 மற்றும் அவென்ஜர் க்ரூஸர் பைக் வாடிக்கையாளர்களுக்கு புதிய சமூகதள குழுமத்தினை தொடங்கியுள்ளது. வருகின்ற ஜூன் 23, 2016  உலக மோட்டார்சைக்கிள் தினத்தில் பல்சர் மேனிக்ஸ் (Pulsar Maniacs) மற்றும் தி அவென்ஜர் காட்ஸ் ( The Avenger Gods – TAG ) சமூகங்கள் செயல்பட தொடங்கும்.

Bajaj-Avenger-riding-community-755x1024 பஜாஜ் வழங்கும் பல்சர் மேனிக்ஸ் மற்றும் தி அவென்ஜர் காட்ஸ் - குழுமம் அறிமுகம்

எவ்விதமான கட்டணங்களும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ள பல்சர் மேனிக்ஸ் மற்றும் தி அவென்ஜர் காட்ஸ் குழுமத்தில் இணைந்து கொள்ள பல்சர் ஆர்எஸ்200 மற்றும் அவென்ஜர் பைக்குகளின் வாடிக்கையாளர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இரு பைக்குகளின் உரிமையாளர்களும் குழுமத்தில் இணைந்து கொள்வதன் பயனாக சர்வீஸ் உதவி , அவசரகால உதவி , வாரந்திர ரைட்ஸ் மற்றும் சேஃப்ட்டி கியர்ஸ் போன்றவற்றை பெற இயலும்.

முதற்கட்டமாக டெல்லி , சென்னை , பெங்களூரு , கோல்கத்தா , மும்பை , புனே மற்றும் ஹைத்திராபாத் என 7 மெட்ரோ நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

Bajaj-Pulsar-riding-Community-1024x761 பஜாஜ் வழங்கும் பல்சர் மேனிக்ஸ் மற்றும் தி அவென்ஜர் காட்ஸ் - குழுமம் அறிமுகம்

முதல்முறையாக தி அவென்ஜர் காட்ஸ் செயல்பாடு வருகின்ற ஜூன் 23 , 2016 அன்று உலக மோட்டார்சைக்கிள் தினத்தில் தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்ட வாரந்திர பயணமாக FLG ரைட் என்ற பெயரில் (Feel Like God) சண்டிகர் முதல் திர்தான் பள்ளத்தாக்கு வரை போக மட்டும் திரும்பி வர என மொத்தம் 700கிமீ 4 பகல் மற்றும் 3 இரவு எடுத்துகொண்டு 15 ரைடர்கள் பங்கேற்க உள்ளனர் . மேலும் மற்ற நகரங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் வழியாக முன்பதிவுசெய்துகொள்ள பஜாஜ் ஆட்டோ அதிகார்வப்பூர்வ இணையதளத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

To register, customers can call on the following numbers:

Chennai: 7338891188

Pune: 7410018222

Bangalore: 7349275188

Mumbai: 7410018221

Delhi: 9971700307

Hyderabad: 9704699362

Kolkata: 9073382289

loading...
25 Shares
Share25
Tweet
+1
Pin