பவர்ஃபுல்லான டியூவி300 எஸ்யூவி வருகின்றதா ?

இந்திய யுட்டிலிட்டி சந்தையின் முன்னனி தயாரிப்பாளாரான மஹிந்திரா நிறுவனம் டியூவி300 எஸ்யூவி காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் எம்ஹாக்100 என்ஜின் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Mahindra-TUV300-endurance பவர்ஃபுல்லான டியூவி300 எஸ்யூவி வருகின்றதா ?

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள எம்ஹாக்100 என்ஜின் டியூவி300 காரில் பெற்றிருக்கும். தற்பொழுது விற்பனையில் உள்ள TUV300 காரில் 84 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எம்ஹாக் 80  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 240Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

மேலும் படிக்க ; டியூவி300 எஸ்யூவி சிறப்புகள்

குவாண்ட்டோ காருக்கு மாற்றாக வந்த நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரில் எம் ஹாக் 100 என புதிய பிராண்டில் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மெனுவல் கியர்பாக்ஸ் வேரியண்டில் பவர் மற்றும் ஈக்கோ என இரு மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது.

mahindra-nuvosport-front-f-1024x768 பவர்ஃபுல்லான டியூவி300 எஸ்யூவி வருகின்றதா ?

டியூவி300 காரில் எம்ஹாக்100 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் வாயிலாக எம்ஹாக்100 பேட்ஜ் பெற்ற மாடலாக டியூவி300 கார் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மெனுவல் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் ஆப்ஷனில் வரலாம். டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கலாம். மேலும் வருகின்ற மே 12, 2016 அன்று விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகின்றது.

மேலும் படிக்க ; நூவோஸ்போர்ட் எஸ்யூவி சிறப்புகள்

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin