பவர்ஃபுல்லான மெக்லாரன் பி1 கார்

மெக்லாரன் பி1 கார் பார்முலா எஃப் 1 கார்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட மெக்லாரன் பி1 கார் பற்றி கானலாம்.

மெக்லாரன் பி1 கார் மற்றும் லாஃபெராரி காரும் ஒன்றினை போலவே காட்சியளிக்கின்றது. இந்த இரண்டு கார்களுமே மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் வடிவமைப்புடன் விளங்கும் கார்களாகும்.
McLaren P1

மெக்லாரன் பி1 காரில் உள்ள பவர்ஃபுல்லான ஹைபிரிட் எஞ்சின் 903 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த காரில் வி 8 எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வி 8 பெட்ரோல் எஞ்சின் 727எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.  மேலும் எலெக்ட்ரிக் மோட்டார் 176எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மொத்தம் பிஆ1 903எச்பி ஆற்றலை வெளியிடும்.

மெக்லாரன் பி1 கார் 375 கார்கள் மட்டுமே தயாரிக்க உள்ளனர்.மெக்லாரன் பி1 காரின் விலை ரூ 6.22 கோடியாகும்.

Comments