பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் விற்பனைக்கு வந்தது

2016 பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஹேட்ச்பேக் கார் ரூ.29.9 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் 118d ஸ்போர்ட்லைன் டீசல் என்ஜின் வேரியண்டில் மட்டுமே வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் 

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட  பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் தற்பொழுது இந்தியாவுக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட சற்று நீளமாகவும் உயரமாகவும் உள்ளது.

முந்தைய கிரிலை விட சற்று கூடுதல் அகலம் கொண்ட கிட்னி கிரிலை பெற்றுள்ளது. பை செனான் முகப்பு விளக்குகளுடன் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குளை பெற்றுள்ளது. பின்புற எல்இடி டெயில் விளக்குகள் எல் வடிவத்தினை கொண்டுள்ளது. மேலும் முன்பக்க பம்பர் மற்றும் பின்புற பம்பர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி , புதுப்பிக்கப்பட்ட ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , குரோம் பூச்சுகள் , சிங்கிள் ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்,  ஆப்ஷனலாக இரட்டை ஜோன்  கிளைமேட் கன்ட்ரோலை பெற முடியும்.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
ads

148பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த்க்கூடிய 2.0 லிட்டர் 4 சிலின்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 320என்எம் ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் விலை ரூ.29.9 லட்சம் ( எக்ஸ் ஷோரூம் தானே )

2016 BMW 1 Series launched in India

Comments