பீஜோ சிட்ரோவன் கார்கள் மீண்டும் இந்தியாவில்

பிரான்ஸ் பீஜோ சிட்ரோவன் கார் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் டாடா குழுமத்துடன் இணைந்து கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றது. பீஜோ நிறுவனம் 2001ம் ஆண்டில் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது.

பீஜோ சிட்ரோவன்

பீஜோ நிறுவனம் கடந்த 4 வருடங்களாகவே இந்திய சந்தையில் நுழைவதற்க்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சனந்த் தொழிற்பேட்டையில் புதிய ஆலை கட்டுமானத்தை தொடங்கி பீஜோ நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தால் இந்த ஆலை திட்டத்தை கைவிட்டது.

டாடா குழுமத்தின் சனந்த் நானோ காரின் தொழிற்சாலை முழுதான உற்பத்தி திறனை எட்டாமலே உள்ளது. மேலும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட டாடா நிறுவனம் புதிய டாடா கைட் மாடலை இதில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பீஜோ சிட்ரோவன் கார்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

பீஜோ 308 செடான், பீஜோ 2008 க்ராஸ்ஓவர், பீஜோ 208 ஹேட்ச்பேக் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவாய்ப்புகள் உள்ளது. டாடாவின் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த கார்களை டாடா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படலாம் என தெரிகின்றது.
 பேஜோ கார் தயாரிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு மற்றும் என்ஜின் நுட்பங்களை இரண்டு குழுமங்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. ஃபியட் குழுமம் போல இப்பொழுது பீஜோ டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

பீஜோ சிட்ரோவன்