புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல் விற்பனைக்கு வந்தது

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ. 5.23 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. போலோ காரில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ
ஃபோக்ஸ்வேகன் போலோ

புதிய போலோ மற்றும் க்ராஸ் போலோ காரில் க்ரூஸ் கன்ட்ரோல் , கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஃபோலடபிள் ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் போன்ற வசதிகள் வந்துள்ளன.

போலோ டிரென்ட்லைன் மாடலில்  ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் , கம்ஃபோர்ட் லைன் வேரியண்டில்  கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஹைலைன் மற்றும் ஜிடி வேரியண்ட்களில் க்ரூஸ் கன்ட்ரோல் , கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஃபோலடபிள் ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

க்ராஸ் போலோ காரிலும் இந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் என்ஜின்யில் எவ்விதாமான மாற்றங்கள் செய்யப்பட வில்லை. சாதரன  மாடல்களின் விலையில் மாற்றமில்லை , GT TDI மற்றும் GT TSI போன்ற மாடல்களின் விலை ரூ.10000 வரை உயர்வு பெற்றுள்ளது.

ads

புதிய போலோ கார் விலை விபரம் (Ex-showroom Mumbai)

  • போலோ 1.2 MPI – ரூ.523,500
  • போலோ 1.5 TDI – ரூ.655,800
  • க்ராஸ் போலோ  Petrol – ரூ. 704,384
  • க்ராஸ் போலோ Diesel – ரூ.831,489
  • போலோ GT TSI – ரூ. 841,466
  • போலோ GT TDI – ரூ. 841,524

New Volkswagen Polo gets more features  

Comments